/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் ஆட்டோ டிரைவர்கள் கவுரவிப்பு
/
கீழக்கரையில் ஆட்டோ டிரைவர்கள் கவுரவிப்பு
ADDED : ஆக 05, 2025 04:27 AM
கீழக்கரை : கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஓட்டல் பங்காளியில் 300 ஆட்டோ டிரைவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கீழக்கரை, மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆட்டோ டிரைவர்களை ஓட்டல் உரிமையாளர் துரை ஜெயமுருகன் வரவேற்றார்.
உணவு பதார்த்தங்களை வழங்கியும், அனைவருக்கும் தனித்தனியாக சால்வைகளை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நகராட்சி துணை தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை எஸ்.ஐ., சல்மோன், வீர கணேசன், தில்லையேந்தல் முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி துணை கவர்னர் டாக்டர் சுந்தரம், ரோட்டரி சங்க தலைவர் சிவகார்த்திகேயன், நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் குகன், தில்லை ரகுமான், டி.எம்.பி., மேலாளர் (ஓய்வு) இளங்கோவன், இன்ஜினியர் சுல்தான் கபீர் கலந்து கொண்டனர்.
ஆட்டோ டிரைவர்களின் பொதுநல சேவைகள் குறித்தும் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்களின் நல்லுறவு குறித்தும் பேசப்பட்டது. கடந்த ஆண்டு கீழக்கரையில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு இதே போன்று பாராட்டு விழா மற்றும் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.