/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
/
ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 02, 2025 05:56 AM
ராமேஸ்வரம் :ராமேஸ்வரத்தில் போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மார்ச் 25ல் ராமேஸ்வரம் ஆட்டோ டிரைவர்கள், தெலுங்கானா பக்தர்கள் இடையே நடந்த மோதலில் ஆட்டோ டிரைவர் இருவர் கைதாகினர். இதனை கண்டித்து சாலை மறியல் செய்த போது போலீசாருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை கண்டித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில்வேல், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ சங்கம் நிர்வாகிகள் சிவாஜி, செந்தில், நா.த.க., மாவட்ட செயலாளர் இளங்கோ, காங்., நகர் தலைவர் ராஜீவ்காந்தி, ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் ராமமூர்த்தி, பிரபாகரன், உட்பட பலர் பங்கேற்றனர்.

