/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்டோ டிரைவர்கள் காத்திருப்பு போராட்டம்
/
ஆட்டோ டிரைவர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 18, 2025 06:46 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரத்தில் 500க்கும் மேற்பட்ட பெர்மிட் இல்லாத வெளியூர் ஆட்டோக்கள் தொடர்ந்து சவாரி ஏற்றி செல்கின்றன. அனுமதியின்றி டூவீலர்களை வாடகைக்கு விடுவதால் பெர்மிட் உள்ள உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள், டூவீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று தாலுகா அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தாசில்தார் அப்துல்ஜபார், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, அனுமதி இல்லாத ஆட்டோ, டூவீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதில் நிர்வாகிகள் செந்தில்வேல், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.