/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்டோ- சரக்கு வாகனம் மோதல்: 2 பேர் பலி
/
ஆட்டோ- சரக்கு வாகனம் மோதல்: 2 பேர் பலி
ADDED : ஜூலை 29, 2025 05:18 AM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ஆட்டோ- சரக்கு வாகனம் மோதியதில் ஆட்டோ டிரைவர்கள் இருவர் பலியாகினர். இருவர் காயம் அடைந்தனர்.
ராமேஸ்வரம் ஏரகாடு பகுதியை சேர்ந்த மணி மகன் சரவணன் 33. இவரது நண்பர்கள் மாங்காடு நம்புநாராயணன் மகன்கள் மாதேஸ்வரன் 34, அகஸ்தியன் 31. மூவரும் ஆட்டோ டிரைவர்கள். இவர்களின் ஒரு ஆட்டோவை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எப்.சி., புதுப்பித்து ராமேஸ்வரம் நோக்கி ஓட்டி வந்தனர்.
அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சரக்கு வாகனத்தில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு பாம்பன் அருகே நாலுபனையை சேர்ந்த டிரைவர் மணிகண்ணன் 35, வாகனத்தை ஓட்டி வந்தார். நாலுபனை அருகே ஆட்டோவும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆட்டோவில் இருந்த சரவணன், மாதேஸ்வரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அகஸ்தியன், மணிகண்ணன் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.