ADDED : ஜன 09, 2025 05:05 AM

ராமநாதபுரம்: ஆன் லைனில் அபராதம் விதிப்பதை நிறுத்த வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி.,ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ராமநாதபுரம் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தலைவர் சண்முகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், மாநிலக்குழு தர்மராஜ், மாநில துணை செயலாளர் ஜீவானந்தம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆட்டோ மற்றும் வாகனம் ஓட்டும் அமைப்பு சாரா அனைத்து தொழிலாளர்களுக்கும் நல வாரியம் மூலம் ஓய்வூதியமாக மாதம் ரூ.6000 வழங்க வேண்டும். தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு படிப்பு, மருத்துவ வசதிகள் வழங்க உறுதியளிக்க வேண்டும், ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழக்கும் போது ரூ.5 லட்சம், இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.