/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா
/
வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா
வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா
வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா
ADDED : அக் 22, 2024 10:40 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம், திருவாடானை, நயினார்கோவில், சாயல்குடி, கமுதி ஆகிய இடங்களில் காட்டுப்பகுதியில் ஏராளமான காட்டுப்பன்றிகள், புள்ளி மான்கள் வாழ்கின்றன. இவை தாகம் தீர்ப்பதற்காக ஊருணிகள், கண்மாய்களை தேடி வருகின்றன.
நெடுஞ்சாலை பகுதிகளை நோக்கி வந்து செல்லும் போது வாகனங்களில் அடிபடுவதும், நாய்கள் துரத்தி கடிப்பதாலும் காயமடைந்து ஆண்டு தோறும் 20க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகின்றன.
மான்கள், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், காட்டுப்பன்றிகள், புள்ளிமான்கள் எந்த நேரங்களில் அதிகமாக வருகின்றன என்பதை கண்டறிய வசதியாக தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் முதற்கட்டமாக பரமக்குடி பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் வைக்க உள்ளோம் என்றார்.

