/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
/
செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து
ADDED : பிப் 13, 2024 04:58 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள்பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து அண்ணா பல்கலை வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல்கல்லுாரிக்கு பல்கலை மானியக்குழுவினரால் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலை அதனை உறுதி செய்து கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது.
இது குறித்து கல்லுாரித் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறுகையில்; கல்லுாரி உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு தகுதிகள் இருந்தால் மட்டுமே தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும். மாவட்டத்திலேயே தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஒரே கல்லுாரி செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி தான் என்றார். முதல்வர் பெரியசாமி உடனிருந்தார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.