/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை உறவினர்கள் தவிப்பு
/
பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை உறவினர்கள் தவிப்பு
பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை உறவினர்கள் தவிப்பு
பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை உறவினர்கள் தவிப்பு
ADDED : ஜன 19, 2025 04:51 AM
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் துாய்மைப் பணியாளர் இல்லாததால் பிரேத பரிசோதனைக்கு வரும் உடல்கள் ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இந்நிலையில் இங்கு பணியாற்றிய தற்காலிக துாய்மைப் பணியாளர் 2024 நவ., முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் விபத்து, கொலை, தற்கொலை செய்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரும் போது துாய்மை பணியாளர் இல்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது.
மக்கள் கூறியதாவது:
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ்ஸ்டேஷன் பகுதியிலிருந்து பிரேத பரிசோனைக்கு கொண்டுவரப்படும் உடல்கள் துாய்மை பணியாளர் இல்லாமல் 60 கி.மீ., தொலைவில் உள்ள ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்வது கவலையாக உள்ளது.
இறந்தவர்களின் உறவினர்கள் ஆம்புலன்சுடன் பின் தொடர்ந்து செல்லும் போது அலைச்சலும், துக்கத்தால் மிகுந்த வேதனையுடன் செல்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாத உடல்களை மறுநாள் பிரேத பரிசோனை செய்யும் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே திருவாடானை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர் மற்றும் துாய்மைப் பணியாளரை உடனே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.