/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குடம்
/
பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குடம்
ADDED : ஆக 17, 2025 11:03 PM

பரமக்குடி : பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் 33 வது ஆண்டு ஆவணி பால்குட விழா நடந்தது.
இக்கோயிலில் ஆக. 8 ஆவணி விழா காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் அம்மன் சந்தன காப்பு, மீனாட்சி, காமாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவ பூஜை மற்றும் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ஆக.,15ல் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று விரதம் இருந்த பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால் குடங்களை எடுத்து, முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
பின்னர் அலங்காரம், தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
சடகோப ராமானுஜம் கோஷ்டியினரின் பஜனை நடந்தது.
மாலை அம்மன் வீதி உலா வந்தார். பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.

