/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாதனை மாணவர்களுக்கு பள்ளியில் பரிசளிப்பு விழா
/
சாதனை மாணவர்களுக்கு பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : ஜன 09, 2024 12:28 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற விளையாட்டு போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தாளாளர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் முகைதீன், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம்அகமது, தலைமை இமாம் அஹமது பஷீர் சேட் ஆலிம் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன் வரவேற்றார்.
விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பின் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எம்.பி., தர்மர் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் கல்விக்குழு தலைவர் செய்யது மூமின், முதுகுளத்துார் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.