ADDED : நவ 21, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: கூட்டுறவு வார விழாவில் சிறந்த சேவைக்கான விருது திருவாடானை கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் 71வது கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
திருவாடானையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுதிறனாளிகளுக்கான கடன், மகளிர் சுய உதவிக்குழு, மீனவர்கள், விதவை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு கடன் வழங்கி சிறந்த சேவை செய்ததை பாராட்டி அதற்கான விருது மேலாளர் சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது.