/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதக்குடி அரசுப்பள்ளிக்கு விருது
/
கமுதக்குடி அரசுப்பள்ளிக்கு விருது
ADDED : ஜூலை 07, 2025 11:16 PM

பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு என சிறந்து விளங்கும் 76 அரசு பள்ளிகளுக்கு 2024-25---------ஆம் ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது. கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக சக்தி 2019 முதல் பணியில் உள்ளார்.
தொடர்ந்து சக ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் 100 சதவீதம் தேர்ச்சி, கற்றல் கற்பித்தலை எளிமையாக்க ஸ்மார்ட் டி.வி., ஸ்மார்ட் பேனல், புரொஜெக்டர், சிசிடிவி., கண்காணிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் துாய்மையான கழிப்பறை வசதி என உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் மாவட்ட, மாநில அளவில் கலைத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திறம்பட மாணவர்களை செயல்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் திருச்சி தேசிய கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில் அமைச்சர்கள் மகேஷ், நேரு உள்ளிட்டோர் விருதை வழங்கினர்.
தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கனகராணி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், கிராமமக்கள் பாராட்டினர்.