/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு
/
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு
ADDED : ஏப் 07, 2025 05:57 AM
ராமநாதபுரம் : ராமநாமநாதபுரம் நகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில் வெயிலில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் ராமநாதபுர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு பதாகை மக்கள் கூடும் இடங்களில் வைக்கப் படுகிறது.
வெயிலின் தாக்கத்தில் ஏற்படக் கூடிய நீர் சத்து குறைபாட்டை சரி செய்யக் கூடிய ஓ.ஆர்.எஸ்., கரைசல் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொது மக்கள் குறிப்பாக முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்து நகராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

