ADDED : மார் 05, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
நிலைய அலுவலர் மார்ட்டின் ஸ்டீபன் ராஜ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விபத்து ஏற்பட்டால் செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீ மற்றும் மீட்பு வினாடி வினா போட்டி நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.உடன் மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தனர்.
