/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலக மக்கள் தொகை தினத்தில் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
/
உலக மக்கள் தொகை தினத்தில் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
உலக மக்கள் தொகை தினத்தில் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
உலக மக்கள் தொகை தினத்தில் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 04:14 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதி மொழியேற்பு நடந்தது. தொடர்ந்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மக்கள் தொகை தின உறுதிமொழியேற்றனர்.
பின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடாடும் வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதன், குடும்ப நல சுகாதாரத்துறை துணை இயக்குநர் சிவானந்தவள்ளி, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் அர்ஜூன்குமார், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஜீவா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.