/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செங்கல் சூளைக்காக வெட்டி அழிக்கப்படும் பனைமரங்கள் விழிப்புணர்வு தேவை
/
செங்கல் சூளைக்காக வெட்டி அழிக்கப்படும் பனைமரங்கள் விழிப்புணர்வு தேவை
செங்கல் சூளைக்காக வெட்டி அழிக்கப்படும் பனைமரங்கள் விழிப்புணர்வு தேவை
செங்கல் சூளைக்காக வெட்டி அழிக்கப்படும் பனைமரங்கள் விழிப்புணர்வு தேவை
ADDED : மே 08, 2025 02:20 AM

கீழக்கரை: கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ரியல் எஸ்டேட்டிற்காக அதிகளவு பனை மரங்களை வெட்டி அழிக்கும் தொழில் சத்தம் இல்லாமல் அரங்கேறி வருகிறது.
கீழக்கரை அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் மிகுதியான அளவில் பனை மரங்கள் உள்ளன. 30 முதல் 80 ஆண்டுகள் வரை உள்ள பனை மரங்கள் தற்போது வரை நல்ல பலன் தந்து கொண்டிருக்கின்றன.
பனைமரத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில் சத்தம் இல்லாமல் வெட்டி அழிக்கப்படும் பனை மரங்களால் பனைத் தொழிலுக்கான எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் பனை மரங்களை அழிவில் இருந்து காப்பாற்றுவது மிகவும் சிரமமான காரியம்.
பனை சார்ந்த உற்பத்தி பொருள்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்ல வேலை வாய்ப்பும், வருமானமும் இருந்து வரும் நிலையில் அதற்கு அடிப்படை ஆதாரமாக உள்ள பனை மரத்தையே வெட்டி அழிப்பது வருத்தம் அளிக்கும் செயலாகும்.
வருவாய்த் துறையின் மூலம் உரிய அனுமதி பெற்று பனை மரங்களை வெட்டலாம் என சட்டம் உள்ள நிலையில் செங்கல் சூளைகளுக்காக ஒரு பனைமரம் ரூ.200 முதல் 400 வரை விற்பனை செய்யப்பட்டு வெட்டி அழிக்கப்படுகிறது.
எனவே தமிழக அரசு பனை மரங்களை வெட்டி அழிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இது குறித்த உரிய விழிப்புணர்வு வழங்குவதும் அவசியமாகும் என்றனர்.

