ADDED : செப் 20, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளியில் இருந்து துவங்கி போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் டி-பிளாக்அம்மா பூங்கா வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பள்ளி தாளாளர் துளசிராம், நிர்வாகி வசந்தா, முதல்வர் சித்ரா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.