ADDED : நவ 14, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். மக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக திருப்புல்லாணி எஸ்.ஐ., சிவசாமி பங்கேற்று மாணவர்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமை பற்றியும், போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு, 18 வயதுக்கு குறைவானோர் வாகனம் ஓட்டினால் தண்டனைகள் பற்றியும் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியை போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் மணிவண்ணன் ஒருங்கிணைத்தார்.

