ADDED : மார் 11, 2026 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லுாரி தேசிய மாணவர் படை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
நடந்தது. முதல்வர் சீனிவாசகுமரன் துவக்கி வைத்தார். என்.சி.சி., மாணவர்கள் 50 பேர் கல்லுாரியில் இருந்து ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை டூவீலரில் ஊர்வலமாக சென்றனர். என்.சி.சி., அலுவலர் லெப்டினன்ட் உத்திரச் செல்வம் ஏற்பாடுகளை செய்தார்.

