ADDED : மார் 25, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகத்தின் மேரா யுவ பாரத் திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாடு முழுவதும் 763 மாவட்டங்களில் ஷஹீத் திவாஸ் (தியாகிகள் தினம்) நேற்று கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அலுவலர் சம்யக் மேஷ்ரம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்மேகம் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தேசப்பற்று, தியாகிகளின் பெருமை, தியாகத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
