ADDED : ஜூன் 14, 2026 11:58 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட தலைவர் இப்ராஹிம் சாபிர் ஊர்வலத்தை துவங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
மாநில துணைத் தலைவர் தாவூத் கைஸர் பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட துணைத் தலைவர் யாசர் அரபாத், பொருளாளர் கரீம் ஹக் சாஹிப் பங்கேற்றனர்.
