UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில், கவுன்சிலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தலைவர் மவுசூர்யா தலைமை வகித்தார். செயல் அலுவலர் பூங்கோதை முன்னிலை வகித்தார். இதில், வீடுகள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டது.
