ADDED : அக் 10, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை,: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் நாட்டு நல பணித் திட்டம் சார்பில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாலிதீன் ஒழிப்பு பற்றியும் மஞ்சப்பையை மீண்டும் உபயோகிப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாடானை மாஜிஸ்திரேட் மனிஷ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பழனியப்பன் மஞ்சப்பையை வழங்க திருவாடானை ஸ்டேட்பாங்க் மேலாளர் மகேந்திரன் பெற்றுக்கொண்டார்.
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மணிமேகலை நன்றி கூறினார்.