ADDED : ஏப் 04, 2025 06:30 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
கல்வி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை வழிகாட்டுதலில் துணை முதல்வர் பாக்கியம் தலைமையில் நடந்தது. அப்போது பள்ளிகளில் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகிறது. அவைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் அகத்தியன், விரிவுரையாளர் பெரிய கருப்பன், ஆசிரியர்கள் கருப்பையா, மகேந்திரன், ராமு வேலு பேசினர். அனைத்து வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மஞ்சூர் நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ரமணி நன்றி கூறினார்.

