ADDED : ஜன 14, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 41வது விளையாட்டு, ஆண்டு விழா நடந்தது.
ஆயிர வைசிய கல்வி நிறுவனங்கள் தலைவர் போஸ் தலைமை வகித்தார். இணைத்தலைவர் பாலுச்சாமி முன்னிலை வகித்தார்.
பள்ளி பொருளாளர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றார். செயலாளர் முருகானந்தம் செயல் அறிக்கை வாசித்தார். பள்ளி இணைச் செயலாளர்கள் பிரசன்னா, ஆர்.பிரசன்னா, ஆயிர வைசிய சபை, பள்ளி நிர்வாகிகள் வாழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் ஜெயபிரமிளா, துணை முதல்வர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தனர். பள்ளி நிர்வாக மேலாளர் சதீஷ் நன்றி கூறினார்.

