ADDED : செப் 07, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல் : -சிக்கல் அருகே சேனாங்குறிச்சி கிராமத்தில் உள்ள மடத்துருணி பொன்சூடுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது மூன்று நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
பொன் சூடுடைய அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களான பூர்ண, புஷ்கலா அய்யனார், ராக்காச்சி அம்மன், கருப்பண்ணசாமி, நாகநாதசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.