/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அடிப்படை வசதி இல்லாத அய்யாவூருணி மயானம்
/
ராமநாதபுரத்தில் அடிப்படை வசதி இல்லாத அய்யாவூருணி மயானம்
ராமநாதபுரத்தில் அடிப்படை வசதி இல்லாத அய்யாவூருணி மயானம்
ராமநாதபுரத்தில் அடிப்படை வசதி இல்லாத அய்யாவூருணி மயானம்
ADDED : மே 30, 2025 11:46 PM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் அய்யாவூருணி பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல்களை புதைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகரில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக அய்யாவூருணி மயானம் உள்ளது. இங்கு உடல்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு முட்புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லை.
மயானத்தின் சுற்றுச்சுவர் பகுதியில் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலை உள்ளது.இந்த மயானத்தில் காவலர்கள் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் மயானத்தை சுத்தம் செய்து சுற்றுச்சுவர்களை அமைத்து பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.