ADDED : ஜன 13, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி அருகே உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு சர்ச்சில் தேர் பவனி விழா நடந்தது
இங்கு ஒன்பதாம் ஆண்டு பங்கு திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த வாரம் துவங்கியது. தினமும் மாலை திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு குழந்தை இயேசு சர்ச்சில் அந்தோணி மைக்கேல் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டது.
பின்னர் குழந்தை இயேசு உருவம் தாங்கிய மின் தேர் பவனி வலம் வந்தது. இதில் ஏராளமான பங்கு மக்கள், அருள் சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அருள் பணியாளர் சுவக்கின் ஞானதாசன் உட்பட பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.