/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஈசா பள்ளிவாசல் தெருவில் ரோடுபடுமோசம்: வாகன ஓட்டிகள் அவதி அதிகாரிகள் பாராமுகம்

ADDED : நவ 11, 2024 04:10 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஈசா பள்ளி வாசல் தெரு ரோடு சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகர் ஈசா பள்ளி வாசல் தெரு வழியாக அரண்மனைக்கு செல்லும் டவுன் பஸ்கள், நயினார்கோவில் வழியாக செல்லும் பஸ்கள் உட்பட தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஈசா பள்ளிவாசல் தெருவில் ரோடு பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக சேமதடைந்து பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.
சிறிது நேரம் மழை பெய்தால் கூட பள்ளங்களில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக கிடக்கிறது. சில சமயங்களில் பாதாள சாக்கடை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.