/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஆட்டோக்களில் ஆபத்தாக ஏற்றப்படும் மூடைகள்
/
பரமக்குடியில் ஆட்டோக்களில் ஆபத்தாக ஏற்றப்படும் மூடைகள்
பரமக்குடியில் ஆட்டோக்களில் ஆபத்தாக ஏற்றப்படும் மூடைகள்
பரமக்குடியில் ஆட்டோக்களில் ஆபத்தாக ஏற்றப்படும் மூடைகள்
ADDED : மே 25, 2025 04:51 AM

பரமக்குடி: பரமக்குடியில் உலா வரும் ஆட்டோக்களில் அதிகமான மூடைகளை ஏற்றிச் செல்லும் சூழலில் விபத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது.
பரமக்குடி சுற்றுவட்ட கிராமப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இங்கிருந்து நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட அனைத்து வகையான விளை பொருட்களும் பரமக்குடி சந்தைக்கு வருகிறது.
இதன்படி பரமக்குடி ஆர்ச் உள்ளிட்ட இடங்களில் அதிகப்படியான கமிஷன் கடைகள் இருக்கிறது.
பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து பொருட்களை ஏற்றி வரும் நிலையில் வாகன ஓட்டிகள் முறைப்படுத்தாமல் உள்ளனர்.
தொடர்ந்து மக்கள் பயணிக்க கூடிய ஆட்டோவில் மூடைகளை ஏற்றுவதுடன், அதன் எடைக்கு மாறாக பொருட்களை அடுக்கி வைக்கின்றனர். இதனால் கவிழும் சூழலில் பின்னால் வரும் வாகனங்களில் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
மேலும் மேடு பள்ளமான ரோடுகளில் சில நேரங்களில் மூடைகளின் கட்டுகள் அவிழ்ந்து பின்னால் வருவோரை விபத்திற்குள்ளாக்கி விடுகிறது.
ஆகவே போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இதுபோன்று சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.