ADDED : ஏப் 01, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது. மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மாரி, தொகுதி பொறுப்பாளர் முனியசாமி, இளைஞரணி அமைப்பாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாநில ஆலோசகர் சிவகுருநாதன் பேசினார்.
டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் பேச்சுப்போட்டி நடத்துவது, 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலியை வட்டியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பொருளாளர் மார்க் தங்கம் நன்றி கூறினார்.