/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடல் அட்டை பதுக்கிய வழக்கில் நுாதன நிபந்தனையுடன் ஜாமின்
/
கடல் அட்டை பதுக்கிய வழக்கில் நுாதன நிபந்தனையுடன் ஜாமின்
கடல் அட்டை பதுக்கிய வழக்கில் நுாதன நிபந்தனையுடன் ஜாமின்
கடல் அட்டை பதுக்கிய வழக்கில் நுாதன நிபந்தனையுடன் ஜாமின்
ADDED : ஜூலை 26, 2025 11:37 PM
ராமநாதபுரம்: பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 132 கிலோ கடல் அட்டை பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு நுாதன நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் கடல் அட்டை பதுக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜூலை 3ல் ஒரு வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு 22 கிலோ பதப்படுத்தப்பட்டதும், 110 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டையும் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
பதுக்கிய சகுபர்சாதிக் 60, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சகுபர் சாதிக் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் கீழமை நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஜாமினில் விட்டால் மீண்டும் குற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சகுபர் சாதிக் வயதை கருத்தில் கொண்டு நீதிபதி மெஹபூப் அலிகான்ரூ.10 ஆயிரம் அபராதம், இருநபர் உத்தரவாத பிணையில் ஜாமின் வழங்கினார். சகுபர்சாதிக் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகக அறக்கட்டளைக்கு திருப்பி பெற முடியாத ரூ.1 லட்சம் தொகையை செலுத்த வேண்டும்.
பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெறும் சுற்றுச்சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு வாரம் பங்கேற்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை மண்டபம் வனத்துறை அதிகாரியிடம் தினமும் ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார்.