/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்களுக்கு எதிரான இருவேறு வழக்கில் ஜாமின் மனு நிராகரிப்பு
/
பெண்களுக்கு எதிரான இருவேறு வழக்கில் ஜாமின் மனு நிராகரிப்பு
பெண்களுக்கு எதிரான இருவேறு வழக்கில் ஜாமின் மனு நிராகரிப்பு
பெண்களுக்கு எதிரான இருவேறு வழக்கில் ஜாமின் மனு நிராகரிப்பு
ADDED : ஏப் 26, 2025 04:25 AM
ராமநாதபுரம் :   ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான இரு வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் ஜாமின் மனுக்களை நிராகரித்து மாவட்ட முதன்மை நீதிபதி மெஹபூப் அலிகான் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் அருகே ஊருணிக்காரன் வலசையை சேர்ந்த கல்லுாரியில் படிக்கும் 18 வயது மாணவி தனியாக கல்லுாரி விடுதிக்கு வந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் மானபங்கம் செய்ய முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பயணிகள் உதவிக்கு வந்ததால் தப்பினார்.
இது குறித்து அந்த பெண் பருத்திகாட்டு வலசையை சேர்ந்த குப்புசாமி மகன் ரகுராமன் மீது கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுராமை கைது செய்தனர்.
இதே போல் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சத்திய சவுந்தர்யா 30, இவருக்கும் புதுக்குடியை சேர்ந்த தென்னரசு 32, இருவருக்கும் திருமணம் பேசி பூ வைத்து இரு குடும்பத்தினர் முடிவு செய்தனர். இரு குடும்பத்தாருக்கும் மன கசப்பு ஏற்பட்டு திருமண ஏற்பாடுகள் நின்று போனது.
சத்திய சவுந்தர்யாவிடம் தென்னரசு அடிக்கடி பேசி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியில் வீடு எடுத்து இருவரும் கணவன் மனைவியாக ஏழுமாதம் வாழ்ந்தனர்.
இதில் 4 மாத கர்ப்பிணியாக சத்திய சவுந்தர்யா உள்ளார்.
இந்நிலையில் தென்னரசு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததால் சத்திய சவுந்தர்யா பரமக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தென்னரசுவை கைது செய்தனர்.
இந்த இரு வழக்குகளிலும் ரகுராமன், தென்னரசு ஜாமின் கேட்டு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி இருவருக்கும் ஜாமின் வழங்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார். இதன் காரணமாக நீதிபதி மெகபூப் அலிகான் இருவரது ஜாமின் மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார்.

