தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பேக்கரி தொழில் திறன் பயிற்சி

 பேக்கரி தொழில் திறன் பயிற்சி

 பேக்கரி தொழில் திறன் பயிற்சி


ADDED : ஜன 30, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் 12 நாட்கள் பேக்கரி தொழிலுக்கான தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

என்.எல்.சி., தமிழ்நாடு பவர் லிமிடெட் துாத்துக்குடி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ் காந்தி கிராம கிராமிய நிறுவனம் மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தில் பயிற்சி நடத்தப்பட்டது.

பயிற்சி முகாமை கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன் துவக்கி வைத்தார். டாக்டர் ரவிச்சந்திரன் பேசுகையில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் மிக அவசியம் எனக் குறிப்பிட்டார்.

என்.டி.பி.எல்., நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆனந்த ராமானுஜன், என்.எல்.சி., நிறுவனத்தின் கூடுதல் தலைமை மேலாளர் ரகுபதி உள்ளிட்டோர் பேசினர்.

காந்தி கிராம கிராமிய நிறுவனத்தின் பேராசிரியர் சண்முகசுந்தரம் பேக்கரி தயாரிப்புகள் குறித்த நடைமுறை பயிற்சிகள் தொழில் முனைவு வழிகாட்டுதல், உணவு பாதுகாப்பு மற்றும் சுய தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினார்.

இதில் 45 பேச்சாளர்கள் பங்கேற்ற நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இன்ஜினியரிங் கல்லுாரி உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல், முத்துவேல் ஆகியோர் பேக்கரி பயிற்சி திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி கூறினர். துணை முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார். கல்லுாரி டீன் திராவிட செல்வி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us