/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடன் கொடுக்காததால் பேக்கரி ஊழியருக்கு அடி சாயல்குடியில் மீண்டும் அதிர்ச்சி

ADDED : மார் 14, 2024 03:23 AM
சாயல்குடி: சாயல்குடியில் இருந்து கன்னியாகுமரி சாலையில் தனியார் பேக்கரியில் கடன் கொடுக்க மறுத்ததால் ஊழியரை அடித்த உதைத்த மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள பேக்கரியில் தின்பண்டங்கள் வாங்கிவிட்டு முன்பின் தெரியாத 30 வயது வாலிபர் கடன் கூறியுள்ளார்.
அப்போது பேக்கரியில் பணிபுரிந்த ஊழியர் பணம் கொடுத்துவிட்டு பொருளை வாங்கிச் செல்லுங்கள். கடன் கிடையாது எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் ஊழியரிடமிருந்து அலைபேசியை வாங்கி துாக்கி வீசியுள்ளார். தடுக்கச் சென்ற பேக்கரி ஊழியரை அடித்து உதைத்தார்.
இது அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகி பரவி வருகிறது.
இதுகுறித்து சாயல்குடி போலீசில் பேக்கரி உரிமையாளர் புதுக்கோட்டை மணமேல்குடி ராஜிவ் புகார் அளித்தார். போலீசார் தகராறில் ஈடுபட்டவரை தேடுகின்றனர்.
கடந்த ஜன.,21ல் இதே போன்று சாயல்குடியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.