/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் பேண்டேஜ் கட்டி நுாதன ஆர்ப்பாட்டம்...
/
கீழக்கரையில் பேண்டேஜ் கட்டி நுாதன ஆர்ப்பாட்டம்...
ADDED : டிச 07, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நிரந்தரமாக நியமிக்க வலியுறுத்தி நுாதமான முறையில் கை, கால், தலையில் பேண்டேஜ் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்கரை ஹிந்து பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா குழு மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு குருவேல் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு மகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு ராஜ்குமார், நிர்வாகிகள் முருகேசன், உடையாள், கவுன்சிலர் சூரியகலா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நகர் செயலாளர் பிரகாசம் நன்றி கூறினார்.