ADDED : பிப் 15, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யு.எப்.பி.யு) சார்பில் சாலைத்தெரு எஸ்.பி.ஐ., அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முத்துமணி முன்னிலை வகித்தார்.
வாரத்தில் 5 நாட்கள் வங்கிப்பணி கோரிக்கையை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். பல்வேறு வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர்.