ADDED : பிப் 14, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மெயின் கிளை வழிவிடு முருகன் கோயில் அருகே நாடார் உறவின்முறை சங்க கட்டத்திலும், அழகன் குளம் கிளை அறந்தாங்கி ரோட்டில் இருக்கும் புதிய கட்டடத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளது. துாத்துக்குடி மண்டல தலைமை முதுநிலை மேலாளர் லட்மிசு நரசிம்மன் திறந்து வைத்தார்.
துாத்துக்குடி மண்டல முதுநிலை மேலாளர் சகாப் ஆஸ்மி, ராமநாதபுரம் பி.டி.ஓ.,க்கள் சோமசுந்தரம், சுதாகர், ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், கிளை மேலாளர்கள் ராமநாதபுரம் பிரசாந்த் குமார், அழகங்குளம் சின்டா பங்கேற்றனர்.
