/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேனர்: அதிகாரிகளே வாங்கித் தாங்க: * தேர்தல் பணி ஊக்கத்தொகை கிடைக்கல* ராமநாதபுரம் மாவட்ட போலீசார் புலம்பல்

ADDED : செப் 23, 2024 05:10 AM
திருவாடானை : லோக்சபா தேர்தல் பணிக்கான ஊக்கத்தொகை இன்னும் கிடைக்கவில்லை என ராமநாதபுரம் மாவட்ட போலீசார் புலம்புகின்றனர். சம்பந்தப்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஊக்கத்தொகையை பெற்றுத்தர எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19 ல் நடந்தது. ஜூன் 4 ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பதவி ஏற்பு விழாவும் முடிந்து விட்டது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் போலீசாருக்கு தேர்தல் பணியாக கருதப்பட்டது.
தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு, ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பு பணி, புள்ளி விபரங்கள் சேகரித்தல் என பல்வேறு பணிகளில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஊக்கத் தொகை வழங்குகிறது.
அந்த வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வருவாயத்துறையினர், ஆசிரியர்களுக்கு அப்போதே ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை.
இவர்களுடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட பல்வேறு துறையினருக்கும் தேர்தல் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், ஏன் போலீசாருக்கு மட்டும் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஊக்கத்தொகை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய போலீசார் புலம்புகின்றனர். எனவே இவ்விஷயத்தில் எஸ்.பி., சந்தீஷ் தலையீட்டு விரைவில் ஊக்கத்தொகையை பெற்றுத்தர வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
---