/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் கழிப்பறை குளியலறை வசதியின்றி பக்தர்கள் பரிதவிப்பு
/
ராமேஸ்வரம் கோயிலில் கழிப்பறை குளியலறை வசதியின்றி பக்தர்கள் பரிதவிப்பு
ராமேஸ்வரம் கோயிலில் கழிப்பறை குளியலறை வசதியின்றி பக்தர்கள் பரிதவிப்பு
ராமேஸ்வரம் கோயிலில் கழிப்பறை குளியலறை வசதியின்றி பக்தர்கள் பரிதவிப்பு
UPDATED : ஜன 01, 2024 07:17 AM
ADDED : ஜன 01, 2024 05:10 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் வடக்கு ரதவீதியில் ரூ. 80 லட்சத்தில் அமைத்த கழிப்பறை, குளியலறை கட்டடம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. கழிப்பறை வசதியின்றி பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி கோயில் வடக்கு கோபுர வாசல் வழியாக தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர்.
இந்நிலையில் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் நீராடி விட்டு வடக்கு ரதவீதி வழியாக கோயிலுக்குள் புனித நீராட செல்கின்றனர். இதில் வயது மூத்த, குழந்தைகள் பலரும் இயற்கை உபாதை கழிக்க வசதியின்றி, அப்பகுதியில் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர்.
இதில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே கோயில் வடக்கு ரத வீதியில் நகரும் கழிப்பறை கூடம் அமைக்கவும், வடக்கு ரதவீதியில் முடங்கி கிடக்கும் ரூ. 80 லட்சத்தில் அமைத்த கழிப்பறை, குளியலறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.