/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி கிராமங்களில் படைக் குருவிகளால் மகசூல் இழப்பு; சோளப்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

ADDED : ஜன 27, 2024 05:35 AM

கமுதி : கமுதி அருகே செங்கப்படை சுற்றியுள்ள கிராமங்களில் நன்றாக வளர்ந்து அறுவடை நேரத்தில் படை குருவிகளால் சோளப்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மகசூல் குறைந்து ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்.
கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சோளம், மிளகாய்,உளுந்து,பருத்தி உட்பட 1000 ஏக்கருக்கு அதிகமாக பயிர்கள் பயிரிட்டுள்ளனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏராளமான பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகி உள்ளது. இதில் தப்பிய செங்கப்படை சுற்றியுள்ள கிராமங்களில் சோளப் பயிர்கள் ஓரளவு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. படைக்குருவிகளால் சோளப்பயிர்கள் முழுவதும் சேதமடைந்து உள்ளது.
விவசாயி அழகுசுந்தரம் கூறியதாவது, கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் படை குருவிகளால் சோளப்பயிர்கள் சேதமடைந்துள்ளது. தற்போது சோளத்தில் வெறும் சக்கை மட்டும் தான் உள்ளது. இதனால் அறுவடை செய்தும் பயனில்லை. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்தும் பயன் இல்லாமல் போனது. இதேபோன்று பாம்புல் நாயக்கன்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.