/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் தண்டவாளங்கள் அருகில் தடுப்பு வேலிகள்
/
பாம்பனில் தண்டவாளங்கள் அருகில் தடுப்பு வேலிகள்
ADDED : மார் 31, 2025 01:34 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் தண்டவாளம் அருகில் மக்கள் பாதுகாப்புக்காக ரயில்வே நிர்வாகம் தடுப்பு வேலிகளை அமைத்தது.
பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம் ஏப்.,6ல் திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவுக்கு பிறகு ராமேஸ்வரத்திற்கு தமிழகத்தின் பலபகுதியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் வர உள்ளன.
இதனால் பாம்பன்- ராமேஸ்வரம் இடையே அதிக ரயில் போக்குவரத்து இருக்கும். இந்நிலையில் பாம்பன் ரயில் பாலம் நுழைவில் இருபுறமும் மீனவர்கள் வாசிக்கின்றனர்.
மீனவர்கள் முன்பு பாம்பன் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர்.
இனிவரும் நாளில் இது தொடர்ந்தால், மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க ரயில்வே நிர்வாகம், பாம்பன் தண்டவாளம் அருகில் இருபுறமும் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு முன்பு 100 மீ., துாரத்திற்கு சிமென்ட் சிலாப்பில் தடுப்பு வேலி அமைத்தனர்.
இதனால் மீனவர்கள், குழந்தைகள் தண்டவாளத்தை கடப்பது தடுக்கப்படும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.