/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரத எழுத்தறிவு திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு
/
பாரத எழுத்தறிவு திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு
பாரத எழுத்தறிவு திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு
பாரத எழுத்தறிவு திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு
ADDED : மார் 18, 2024 06:36 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் பாரத எழுத்தறிவு திட்டத்தில் 6969 பேர் அடிப்படை எழுத்தறிவு தேர்வு எழுதினர்.
மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் கற்போர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு சார்ந்த பயிற்சிகளுக்காக 11 ஒன்றியங்களில் 347 மையங்களில் 6969 பேருக்குதன்னார்வலர்கள் மூலம் கற்போர்களுக்கு பயிற்சி வழங்கபடுகிறது.
அவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று நடந்தது.
ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எழுத்தறிவுத் தேர்வு துவக்க நிகழ்ச்சி நடந்தது.
இதில், மத்திய பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்க மூத்த ஆலோசகர் குல்தீப் குமார், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கக மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு ஆகியோர் பங்கேற்றனர்.
தேர்வு ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சுதாகரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பரமக்குடி முருகம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை)பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் செய்தனர்.--------

