/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ரூ.89.71 கோடியில் கட்டப்பட்ட பட்டாலியன் கட்டடம்; வெள்ளத்தில் மிதக்கிறது நிதி வீணடிப்பு

ADDED : நவ 23, 2024 06:46 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பகுதியில் ரூ.89.71 கோடியில் கட்டப்பட்ட 12-வது பட்டாலியன் போலீஸ் படையின் கட்டடம் பயன்பாடில்லாமல் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. அரசு நிதியை அதிகாரிகள் வீணடித்துள்ளனர்.
தமிழகத்தில் 2019ல் 12வது பட்டாலியன் போலீஸ் படையை அரசு அறிவிப்பு செய்தது. தற்போது தற்காலிகமாக அந்த 12வது பட்டாலியன் போலீஸ் படை மணிமுத்தாறு பகுதியில் உள்ள 9வது பட்டாலியன் படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த 12வது பட்டாலியன் படைக்கு ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் 79 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு பட்டாலியன் போலீஸ் படைக்கான நிர்வாக அலுவலகம், கவாத்து மைதானம், ஆயுதங்கள் வைப்பறை, போலீசாருக்கான குடியிருப்புகள் அனைத்தும் ரூ.89.71 கோடியில் கட்டப்பட்டது.
இந்த கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மிகவும் தாழ்வான இப்பகுதி எப்போதுமே மழை நீர் தேங்கும் பகுதி என்பதால் தற்போது ராமநாதபுரத்தில்பெய்து வரும் கன மழையால் 12வது பட்டாலியன் அலுவலகம், குடியிருப்புகள், கவாத்து மைதானம், உள்ளிட்ட அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து மிதக்கிறது.
இதனால் பயன்பாடில்லாத நிலையில் இதற்கான நிதி ரூ.89.71 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப்பகுதியில் மழை நீர் தேங்கமால் நடவடிக்கை எடுத்து 12வது பட்டாலியன் போலீஸ் படை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.