ADDED : மார் 11, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானையில் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தில், மகளிருக்கான அழகு கலை பயிற்சி நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், பெண் தொழில் முனைவோர் வெறும் கனவு காணாமல் அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை பெற்று தொழில் துவங்க முன்வர வேண்டும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் சமூகத்தில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்றார்.
பயிற்றுநர் சங்கீதா பெண்களுக்கு தேவையான பியூட்டி பார்லர் நுணுக்கங்களை செய்முறையுடன் விளக்கினார். மாவட்ட திட்ட பொது மேலாளர் பொன்வேல் முருகன் சான்றிதழ் வழங்கினார்.
