ADDED : மார் 15, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரி 17வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் அமேஷ் ஜெபராஜ் சார்லஸ் தலைமை வகித்தார்.
முதல்வர் குருசாமி முன்னிலை வகித்தார். சாதனை ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மாணவிகளின் பரதநாட்டியம், குழு நடனம் நடந்தது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிர்வாக குழு உறுப்பினர் சுசிலா மனுவேல் உட்பட கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவி முனிய சூர்யா நன்றி கூறினார்.
