ADDED : ஏப் 27, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள் மிதந்து சென்றது. இதில் ஒரு சில கடற்கரையில் ஒதுங்கியது. இதனை அங்கு குளித்து விளையாடிய சுற்றுலா பயணிகள் பார்த்தனர். இதனுள் சீட்டு கட்டுகள் அடுக்கி இருப்பது போன்று பீடி இலைகள் இருந்தது. இதனை தனுஷ்கோடி மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பீடிஇலை பார்சல்களை துாத்துக்குடி, மண்டபம், பாம்பன், கீழக்கரை போன்ற இடங்களில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்தி சென்றபோது, இந்திய பாதுகாப்பு படையின் ரோந்து கப்பலை கண்டதும் கடலில் துாக்கி வீசிவிட்டு தப்பி இருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.