/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையோரம் மாட்டிறைச்சி கழிவுகளால் பாதிப்பு
/
கிழக்கு கடற்கரை சாலையோரம் மாட்டிறைச்சி கழிவுகளால் பாதிப்பு
கிழக்கு கடற்கரை சாலையோரம் மாட்டிறைச்சி கழிவுகளால் பாதிப்பு
கிழக்கு கடற்கரை சாலையோரம் மாட்டிறைச்சி கழிவுகளால் பாதிப்பு
ADDED : ஏப் 23, 2025 04:26 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் அரசு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் மாட்டிறைச்சி வெட்டுபவர்கள் அதன் கழிவுகளை கொண்டு வந்து தினமும் அப்பகுதியில் கொட்டி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முறையாக மாட்டிறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இப்பகுதியில் மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.