ADDED : செப் 09, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் மகாகவி பாரதியார் நினைவு தினம் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி தலைமை வகித்தார். முதல்வர் ரஜனி முன்னிலை வகித்தார். நுண்ணுயிரியல் துறை மாணவி ஹாசினி வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் வீரப்பன், மகாகவி பாரதியாரின் தேசப்பற்று, சமூக சீர்திருத்தச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து பேசினார். தொடர்ந்து பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. –
