/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரதிதாசன் பிறந்தநாள் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
/
பாரதிதாசன் பிறந்தநாள் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : ஏப் 30, 2025 06:22 AM

ராமநாதபுரம்; பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாரதிதாசன் உருவ படத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தமிழ் வளர்ச்சிதுறை உதவி இயக்குநர் சபீர்பானு உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சேதுபதி நகர் அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் தலைமை வகித்தார்.ஆலம் மரக்கன்றுகள் நடவு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிக்கோலஸ் சிலம்பாட்ட பயிற்சியாளர் மேத்யூ இம்மானுவேல் மற்றும் சிலம்பாட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பசுமை முதன்மையாளரான பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தார்.